ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ..

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ..

” திருப்பூர் டைரி குறிப்புகளாக ..” ஆகஸ்ட் 1 ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12 ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது .

இங்குத் தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதைத் தக்க வைத்துகொள்ளத் தெரியாமல் , பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்புப் பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றித் தன் பார்வையில் எடை போடும் களமாக இந்தத் தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி

முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு துறையின் பணி , அதன் பணிச்சுமை , அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றிச் சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு இருபவர்களாக்கான ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு” போல வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார் . தொடருக்குச் சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு , திரைகதை முக்கியம் என்பதைப் போலச் சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாகத் தொடரை நகர்த்தி இருக்கிறார் .

தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்தத் துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த த்னது அனுபவ முத்துக்களைச் சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு . ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாகத் தந்து இருக்கிறார் . பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை முடிச்சுகளை த்னது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து , அதன் பலனையும் விளைவையும் விவரித்துச் சொல்லி இருகிறார் .

இங்குப் பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்குச் சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர் கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்தக் கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது . மனித உரிமைகள் இங்குக் காசுக்காகப் பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிகக் குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் .

பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்துக் கொண்டு இருக்கும் நான் இந்தப் பதிவுகளைப் பற்றிச் சொல்வது மிகப் பெரிய விசயமாக இருக்காது ஆனால் திருப்பூருக்குச் சம்பந்தமில்லாமல் இந்தப் பதிவுகள் மூலம் மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்துப் பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் , இந்தப் பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் .

கிருஷ்ணமூர்த்தி . திருப்பூர்

வலைபதிவர் .( முதல்கோணல் ) http://myowndebate.blogspot.in/2014/11/blog-post.html

factory_html_6399a4a0

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *