ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் …….


நானொரு வலைப்புழு . வலையில் எது கிடைத்தாலும் படித்து விடுவேன் . கொஞ்சம் ஆர்வமுடன் படிக்கத்தக்க நடையில் இருக்க வேண்டும் . அவ்வளவு தான் . அவ்வகையில் ஜோதிஜியின் வலைப்பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படிப்பதுண்டு . தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட ஈழம் மற்றும் திருப்பூர் மிகப்பெரும் தகவல் சுரங்கங்கள் . அவ்வப்போது இவர் எழுதும் காரைக்குடி உணவு சிந்திக்கக் கூடியன . இவர் காரைக்குடி உணவகத்தில் எழுதியுள்ள சத்து மாவை எங்கள் குடும்பத்தில் தயாரித்துத் தினமும் சாப்பிட்டு வருகின்றோம் . நன்றிகள் பல . அவ்வகையில் மற்றுமோர் திருப்பூர் படைப்பாகத் தொழிற்சாலை குறிப்புகள் என்ற இத்தொடர் வலைத் தமிழில் வெளி வந்த போது துவக்கத்தில் இது மற்றொரு ” டாலர் நகரமோ ” என்ற முன் முடிவுடன் படிக்கத் துவங்கினேன் . இவரே கதை சொல்லியாகவும் வருவதால் தன்னைப் பற்றிய குறிப்புகளாக இருக்குமோ என்று எண்ணி விட்டேன் . கொஞ்சம் கொஞ்சமாகக் குறிப்புகளில் ஆழ்ந்தேன் .

இத் தொடரில் ஆசிரியர் ஒரு ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலையை எவ்வாறு தன் நிர்வாகத் திறனால் மேம்படுத்துகிறார் என்பதைச் சம்பவங்கள் , குறிப்புகள் , தொழிலாளர்கள் மூலமாகக் கூறுகிறார் . சம்பவங்கள் என்று பார்த்தால் மிகச் சிலவே . ஆனால் அதன் ஊடாகத் தரும் தகவல்கள் மிகப்பெரும் களஞ்சியம் . நமக்குத் தெரிந்த ஒரு நகரத்தின் மற்றொரு பக்கத்தினை மிகவும் நேர்த்தியாகக் கவனமாகக் காண்பித்துள்ளார் . ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தினை அம் மக்களின் வாழ்வியலை ( நல்லதோ – கெட்டதோ ) எழுத அத்துறையை மிகவும் நேசிப்பவரால் மட்டுமே முடியும் . இவருக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது . போர் அடிக்கக் கூடிய டெஸ்ட் மாட்ச்சில் தொடர்ச்சியாக 6 – 4 அடிப்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் விளாசியுள்ளார் . துறை சார்ந்த விஷயங்களை இவ்வளவு எளிமையாகத் தன்னால் விவரிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார் . இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் இத்துறையில் இருப்பவர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் ஒரு சிறப்புக் கையேடு . 2009 ல் இருந்து இவரின் தேவியர் இல்லம் பதிவுகளைப் படித்து வருகிறேன் . அவ்வப்போது பின்னூட்டமும் இடுவதுண்டு . மிகச்சிறப்பாகச் சுவாரஸ்ய நடையில் எழுதுகிறார் . அவன் அருள் . இவ்வளவு எழுதுவதற்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது . இத்தொடரை படிக்குமுன் தாங்கள் ஒரு உயர் பதவியில் நேரம் கிடைக்கக் கூடிய இடத்தில் பணி புரிவீர்கள் என்று எண்ணியிருந்தேன் .

இத்தொடர் அந்த அனுமானங்கள் உடைத்தெரிந்து விட்டது . துறை சார்ந்த தங்கள் விளக்கங்கள் தொழிலாளர்கள் சார்ந்த நடவடிக்கைகள் ( தட்டிக் கொடுத்து வேலை வாங்குதல் ) மற்றும் முதலாளியின் முட்டாள் தனங்களைத் தவிர்த்தல் . உண்மையிலேயே இவருக்கு நேர நிர்வாகம் மிகச் சிறப்பாகக் கைவரப் பட்டிருக்கிறது . முக்கியமாக … தொடரில் வரும் பெண் ( அவள் பெயர் ரம்யா ) மனதில் நிற்கிறாள் .

சிவகுமார்நீலமேகம் . https://plus.google.com/110527960579111333990/posts

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *